பிறருக்காக வாழ்!

''நீ!!! யாருக்காக வாழ்கிறாயோ'' அவர்களுக்காக உன்னை விட்டுக்கொடு.
''உனக்காக யார் வாழ்கிறார்களோ'' அவர்களை எதற்காகவும் விட்டுகொடுத்துவிடாதே!!!

வேதாகமமும் – அலைப்பேசியும்

செல்லிடைப்பேசிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம்,  நமது வேதாகமத்துக்கு கொடுக்கிறோமா? இதோ சில ஆலோசனைகள்: 

நாம் செல்லுமிடமெங்கும் அதை எமது கைப்பையில் அல்லது சட்டைப்பையில் எடுத்துச்சென்றால் என்ன?

   ஒரு நாளில் அதிக தடவை அதை உபயோகித்தால் என்ன?

   அது இன்றி வாழமுடியாது என்ற நிலையை ஏற்படுத்திக்கொண்டால் என்ன?

   மற்றவர்களுக்கு அதைப் பரிசாகக்கொடுத்தால் என்ன?

  பிரயாணம் பண்ணும்போது அதை பாவித்தால் என்ன?

  ஆபத்தானதும் அவசரமுமமான நேரத்தில் எப்படிப் பாவிப்பதென்று கற்றுக் கொடுத்தால் என்ன?

  எம் அயலவருக்கு அதை எப்படிப் பாவிப்பதென்று கற்றுக்கொடுத்தால் என்ன?

  சரிஇன்னொரு விஷயம்,

செல்லிடைப்பேசியை பாவித்துஅதற்கு உரிய கட்டணத்தை செலுத்தாவிட்டால் தொடர்பு துண்டிக்கப்படும். ஆனால் வேதாகமத்தை அதிகமாக பாவிப்பதினால்,   நமக்கும் நமது ஆண்டவருக்கும் இடையே உள்ள உறவு அதிகரிக்கும்.

  அது சரிதான்உங்களுடைய பரிசுத்த வேதாகமம்தான் எங்கே?