பிறருக்காக வாழ்!

''நீ!!! யாருக்காக வாழ்கிறாயோ'' அவர்களுக்காக உன்னை விட்டுக்கொடு.
''உனக்காக யார் வாழ்கிறார்களோ'' அவர்களை எதற்காகவும் விட்டுகொடுத்துவிடாதே!!!

அன்பைத் தேடும் நோயினால் பீடிக்கப்பட்டோருக்கு..... அன்பைக் காட்டுவோம்!

"என்னை யாரேனும் நேசிக்கமாட்டார்களா?" என்று ஏங்கி நிற்கும் ஜனங்களால் இவ்வுலகம் நிறைந்திருக்கிறது. அநேக கிறிஸ்தவர்களும், தாங்கள் நேசிக்கப்படும்படியாக சபைவிட்டு சபை செல்லுகிறார்கள்! சிலர் நண்பரிகளிடமும், சிலர் திருமண உறவிலும் அவ்வன்பைத் தேடுகிறார்கள். ஆனால் பரிதாபம்! இவ்விதமாய்த் தேடுவதின் பிரதிபலன் ஏமாற்றத்திலேயே முடிவடைகிறது!! 

அனாதைகளைப் போல, இவ் ஆதாமின் பிள்ளைகள் பாதுகாப்பற்றவர்களாய் மீண்டும் மீண்டும் "அன்பினைத் தேடும்” நோயினால் பீடிக்கப்படுகிறார்கள். இதில் இவ்வாறு இருக்க வேண்டியது நிச்சயமாய் அவசியமேயில்லை!!

இப்பிரச்சனைகளுக்கு விடை யாது? தேவனுடைய அன்பில் பாதுகாப்பைக் கண்டுகொள்வதுதான் இதற்கு நிரந்தரமான விடை! 

மறுபடியும், இயேசு தன் சீஷர்களுக்கு, அவர்களுடைய தலையின் மயிரெல்லாம் எண்ணப்படிருக்கிறதென்றும், கோடிக்கணக்கான் பறவைகளைப் போஷிக்கிறவர், கோடிக்கணக்கான மலர்களை உடுத்துவிக்கிறவர் நிச்சயமாய் உங்களையும் பராமரித்துக் காப்பார் என்றும் உறுதிபட கூறினார். 

இவையெல்லாவற்றிற்கும் மேலாக, "தம்முடைய சொந்த குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர் அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?" என்று ரோமர் 8:32-ம் வசனம் அறைகூவலிடுகின்றது. 


"(நம்மீது தேவன் கொண்ட பூரண அன்பை) விசுவாசித்தவர்களாகி நாமோ, அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்" (எபிரெயர் 4:3) என்றே வாசிக்கிறோம். மேலும், இந்த இளைப்பாறுதலுக்குள், நம் முழு இருதயத்தோடும் நாம் பலவந்தம் செய்து பிரவேசிக்க வேண்டும் எனவும் வேதம் வலியுறுத்திக் கூறுகிறது (எபிரெயர் 4:11). இந்த இளைப்பாறுதலைக் கண்டடையாதவர்களே மிக எளிதில் அலைக்கழிக்கப்பட்டு வீழ்ச்சியடைவார்கள்! 

தேவனில் முழு இருதயத்தோடு அன்புகூராதவன் சபிக்கப்பட்டவனாக இருக்கின்றான். ஆகவே "என்னை யாரேனும் நேசிக்கமாட்டார்களா?" என்று மனிதர்களை நோக்கிப் பார்க்கின்ற கிறிஸ்தவர்களைவிட, கிறிஸ்துவைப்போல நான் நேசிப்பவனாக இருப்பேன் என்று கூறுகின்ற கிறிஸ்தவர்களையே உலகம் வாஞ்சையோடு எதிர்பார்த்து நிற்கின்றது. 

அன்பின் சகோதரர்களே, நேசத்தை நாடும் இந்த உலகத்திற்கு கல்வாரி அன்பை காண்பிக்கும் கிறிஸ்துவின் நேசத்தை நாம் திருச்சபையாரிடத்தில், மக்கள் கூட்டத்தினரிடத்தில், ஊராரிடத்தில், தேசத்திலுள்ள ஜனங்களிடத்தில், எதிரிகளிடத்தில், இனத்தாரிடத்தில் காண்பிக்கின்றோமா? கிறிஸ்து உங்களை நேசிக்கின்றார் என்ற சத்தியத்தை பிறருக்கு கூற மறக்காமலிருப்போம். நாமும் மறவாதிருப்போம்.