பிறருக்காக வாழ்!

''நீ!!! யாருக்காக வாழ்கிறாயோ'' அவர்களுக்காக உன்னை விட்டுக்கொடு.
''உனக்காக யார் வாழ்கிறார்களோ'' அவர்களை எதற்காகவும் விட்டுகொடுத்துவிடாதே!!!

இரட்சிப்பு...

முழு வேதாகமத்திலும் இருதயமாக கருதப்படுவது இரட்சிப்பேயாகும்.

முழு வேதாகமத்திலும் இருதயமாக கருதப்படுவது இரட்சிப்பேயாகும். 

தகுதியற்ற அல்லது காணாமற்போன ஒரு மனுஷனுடைய பாவத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலுமிருந்து அவனைக் காப்பாற்றும் தேவனுடைய உன்னத கிரியையே இரட்சிப்பு.

• இது முற்றும் முழுவதுமாக கர்த்தருடையதாகும். (யோனா 2:9)

• இரட்சிப்பை மனிதன் எவ்விதமான கிரியைகளைச் செய்தும் பெறமுடியாது. (ரோம 3:20, 4:16, எபே 2:8-10)

• இரட்சிப்பு என்ற சொல் வெறும் பாவமன்னிப்பை மட்டும் கூறாமல், நீதிமானாகுதல், மறுபிறப்படைதல், வரப்போகும் உயிர்த்தெழுதல், மகிமையடைதல் போன்ற காரியங்களை உள்ளடக்கிய தொடர்ச்சியான காரியமாகும்.

• பாவமாகிய குற்ற உணர்விலிருந்தும் தினந்தோறும் தினந்தோறும் பாவத்தின் வல்லமையிலிருந்து விடுதலையடைந்து பரிசுத்தமடைதலும் பாவத்தின் சமூகத்திலிருந்து மீட்கப்பட்டு மகிமையடைதலையும் இரட்சிப்பு தன்னகத்தே கொண்டுள்ளது.

• இரட்சிப்பைக் கொடுப்பதற்காகவே தேவன் பூலோகத்திற்கு வந்து பாடுபட்டு மரித்து அடக்கம்பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்தார்.


நன்றி :ஜீவன்