பிறருக்காக வாழ்!

''நீ!!! யாருக்காக வாழ்கிறாயோ'' அவர்களுக்காக உன்னை விட்டுக்கொடு.
''உனக்காக யார் வாழ்கிறார்களோ'' அவர்களை எதற்காகவும் விட்டுகொடுத்துவிடாதே!!!

நிசேயா விசுவாச அறிக்கை - NICENE CREED


அப்போஸ்தல விசுவாச அறிக்கை என்பது இரட்சகர் இயேசுவின் சீடர்களான அப்போஸ்தலர்களின் விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே இதனை அப்போஸ்தல விசுவாச அறிக்கை என அழைக்கின்றோம்.
ஆனால் நிசேயா விசுவாச அறிக்கை என்பது நிசேயா என்ற இடத்தில் நடைபெற்ற திருச்சபை பேரவை முடிவுச் செய்ததை நாம் விசுவாச அறிக்கையாக பயன்படுத்துகின்றோம். எனவே இதனைநிசேயா விசுவாச அறிக்கை எனக் குறிப்பிடுகின்றோம்.
பின்னணி: 
 அப்போஸ்தல விசுவாச அறிக்கை:
ஒவ்வொரு விசுவாச அறிக்கைக்கும் பின்னணி உள்ளது. ஆரம்பத்தில் இயேசுகிறிஸ்துவின் உண்மையான மனித தன்மையை அறிவியல் கோட்பாட்டாளர்கள் (Gnostics) மறுத்தனர். அப்போதுதான் இயேசு உண்மையான மனிதராகவும் இருக்கின்றார் என்பதை திருச்சபை உறுதிப்படுத்தியது. அதன்பின்அப்போஸ்தல விசுவாச அறிக்கை பயன்பாட்டுக்கு வந்தது.
 நிசேயா விசுவாச அறிவிக்கை:
நிசேயா விசுவாச அறிக்கைக்கும் ஒரு வரலாறு உள்ளது. லிபியாவைச் சேர்ந்தவர் ஆரியுஸ் என்பவர். இவர் ஒரு போதகர். ஆரியுஸ், இயேசுவின் கடவுள் தன்மையை மறுத்தார். இயேசு தெய்வந்தான். இருப்பினும் கடவுளால் படைக்கப்பட்டவர். இயேசு இல்லாத காலம் ஒன்று இருந்தது. இயேசு பிதாவைவிட குறைவானவர். இப்படிப்பட்ட தவறான போதனையை அரியூஸ் சொல்லிவந்தார்.
நிசேயா பேரவை:
ஆரியுஸின் தவறான போதனை அன்றைய திருச்சபையில் பெரிய கொந்தளிப்பினை ஏற்படுத்தியது. எனவே நிசேயா பெருநகரில் திருச்சபைகளின் ஐக்கியப் பேரவை கூடியது.
கி.பி.325ல் கூடிய பேரவை இயேசுவின் தெய்வீகத்தை நிலைநாட்டியது. இயேசு, கடவுள் என்ற வார்த்தையை பயன்படுத்தியது. இந்த முதல் கூடுகையில் தொகுக்கப்பட்ட விசுவாச அறிக்கை, பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கிறேன் என முடிந்தது. அதன்பின்பு அதோடு சில சாப வார்த்தைகள் சேர்க்கப்பட்டிருந்தன. இந்த விசுவாச அறிக்கையின் பின்னணியில் பற்றி பல மரபுகள் உள்ளன. அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த போப் அதனாசியஸ்-1 தான் இதன் ஆக்கியோன். இது கோப்டிக் என்ற திருச்சபையின் மரபு. ஆதிகால கிறிஸ்தவர்களுக்கு செசரியா முக்கிய இடமாக இருந்தது. இங்குள்ள திருச்சபை இந்த விசுவாச அறிக்கையை ஏற்கனவே பயன்படுத்தி வந்தது. இதனை செசரியாவின் யுசிபியஸ் என்பவர் இப்பேரவையில் சமர்ப்பித்தார் என்பது மற்றொரு மரபு.
நிசேயா- கான்ஸ்டாண்டிநோபிள் விசுவாச அறிக்கை -கி.பி.381.
  ரோமப் பேரரசராக இருந்தவர். கான்ஸ்டன்டைன். இவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். திருச்சபையில் நிலவிவந்த இப்படிப்பட்ட விசுவாச குழப்பத்தை நிவிர்த்திச் செய்திடபாடுபட்டார். 325ல் கூடிய பேரவையில் தனது செல்வாக்கை பயன்படுத்தினார்.
  கி.பி.381ல் திருச்சபைகளின் ஐக்கியப் பேரவை மறுபடியும் கூடியது. நாங்கள் பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கிறோம் என்ற வாசகம் அதில் இருந்தது. ஆனால் இதில் மைந்தனும் என்ற சொல் இல்லை. கடைசியாக பேரவை 431ல் மூன்றாவது முறையாக கூடியது. இது கி.பி.325ல் எபேசுவில்கூடி ஏற்கனவே தீர்மானித்த சொற்களையே உறுதி செய்தது.
  ஆறாவது நூற்றாண்டில் லத்தீன் திருச்சபைகள் குமாரனிலிருந்து (Filioque) பரிசுத்த ஆவியானவர் புறப்பட்டு வருகின்றார் என்பதை விசுவாச பிரமாணத்தில் சேர்த்தது.
சிறப்பு: நிசேயா விசுவாச அறிக்கையை விசுவாசத்தின் அடையாளம் (Symbol of Faith) எனக் கூறுவர். இந்த விசுவாச அறிக்கை உண்மையான கிறிஸ்தவ விசுவாசத்தின் உரைக்கல் எனவும் குறிப்பிடுவர். பொதுவாக ஞானஸ்நானம் நடைபெறும் சமயத்தில் அப்போஸ்தல விசுவாச அறிக்கையைதிருச்சபைகள் பயன்படுத்துகின்றன.
  திருவிருந்து (நற்கருணை) வழிபாட்டுவேளையில் நிசேயா விசுவாச அறிக்கையை திருச்சபைகள் உபயோகிக்கின்றன.
விசுவாச அறிக்கை:
நிசேயா விசுவாச அறிக்கையின் பல வடிவங்கள் உள்ளன. பொதுவாக நாம் பயன்படுத்தும் விசுவாச அறிக்கை இதோ: ஒரே கடவுளை விசுவாசிக்கிறேன். இவர் வானத்தையும், பூமியையும் காணப்படுகிறதும் காணப்படாததுமான எல்லாவற்றையும் சிருஷ்டித்தவர் சர்வத்திற்கும் வல்ல பிதாவுமானவர். ஒரே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன். இவர் கடவுளுடைய ஒரேபேறான குமாரன். சர்வகாலங்களுக்கு முன்னே பிதாவினின்று பிறந்தவர், சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல, பிறந்தவரேகடவுளின்று கடவுள், ஜோதியினின்று ஜோதி, மெய்யான கடவுளினின்று மெய்யான கடவுள், பிதாவோடு ஏகவஸ்துவானவர் இவரைக்கொண்டு எல்லாம் சிருஷ்டிக்கப்பட்டன. இவர் மனிதராகிய நமக்காகவும் நமது இரட்சிப்பின் நிமித்தமாகவும் பரலோகத்திலிருந்து இறங்கி பரிசுத்த ஆவியினால் கன்னி மரியாளிடத்தில் அவதரித்து மனிதனானார். பொந்தியுபிலாத்துவின் கீழ் நமக்காகச் சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டார் வேதவாக்கியங்களின்படியே மூன்றாம் நாள்உயிர்த்தெழுந்தார். பரலோகத்துக்கு ஏறிப் பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க மகிமையோடே திரும்பவருவார் இவருடைய இராஜ்யத்திற்கு முடிவில்லை.
பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கிறேன். இவர் ஆண்டவரும் உயிர்ப்பிக்கிறவருமாமே. இவர் பிதாவினின்றும் குமாரனின்றும் நாம் புறப்படுகிறவர் பிதாவோடும் குமாரனோடும் ஏகமாய்த் தொழுது மகிமைப்படுத்தப்படுகிறவர் தீர்க்கதரிசிகளைக்கொண்டு உரைத்தவருமாமே. பரிசுத்தமும் பொதுவுமான ஒரே அப்போஸ்தலசபை உண்டென்று விசுவாசிக்கிறேன். பாவமன்னிப்புக்காக ஒரே ஞானஸ்நானம்உண்டொன்று அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழுதலையும், வரும் நித்திய ஜீவனையும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆமென்.
(இப்படியாக புதுப்பிக்கப்பட்ட நிசேயா விசுவாச பிரமாணம் அன்றைய சபை மக்களால் அறிக்கை செய்யப்பட்டது).