பிறருக்காக வாழ்!

''நீ!!! யாருக்காக வாழ்கிறாயோ'' அவர்களுக்காக உன்னை விட்டுக்கொடு.
''உனக்காக யார் வாழ்கிறார்களோ'' அவர்களை எதற்காகவும் விட்டுகொடுத்துவிடாதே!!!

வாசகங்கள்

இன்று நாம் பயணம் செய்யும் வாகனங்களின் பின்னால் பல வாசகங்கள், தத்துவங்கள் எழுதப்பட்டிருப்பதை காணலாம். அவை வாழ்க்கையின் அனுபவங்களாகவும், அறிஞர்களினால் கூறப்பட்டவைகளாகவும் காணப்படுகின்றன. அவ்வாறே கல்லறையின் வாசகங்களை கவனித்துப் பாருங்கள். சிரிப்பூட்டக்கூடியதும் அதேநேரம் சிந்திக்க வைக்ககூடியதுமான சில வாசகங்களைக் கொண்டிருக்கும் அவற்றை வாசிக்க நீங்களும் என்னுடன் கல்லறைத் தோட்டத்திற்குள் வருவது நல்லது.

இயேசுகிறிஸ்து வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையாக, ஒரு போலியான வாழ்க்கை வாழாமல் இருக்கும்படி தமது சீஷர்களுக்குப் போதித்துள்ளார். கிறிஸ்தவர்களுக்கும் அது பொருந்தும். 'இயேசுகிறிஸ்து உங்கள் வீட்டிலிருந்தால் அயலார் அதை சீக்கிரமே அறிந்துகொள்வார்கள்.| என்று ஒருமுறை டி.எல்.மூடி என்ற பிரசங்கியார் கூறினார். ஆனால் (கிறிஸ்து + அவர்கள் ஸ்ரீ கிறிஸ்தவர்) களுடைய வீடுகளைவிட, சிலுவை அடையாளமிடப்பட்ட கல்லறைகளே இன்று கிறிஸ்தவர்களின் வசிப்பிடங்களாகியுள்ளன.

ஒரு கவிஞர் கூறிய குட்டிகதையொன்று:- ஒரு அரசியல்வாதியின் கல்லறையில் எழுதப்பட்டுள்ள வாசகம் இது: 'தயவுசெய்து கைதட்டி விடாதீர்கள். எழும்பி பேச ஆரம்பித்து விடுவார்!" ஒரு தொழிலாளியின் கல்லறையில் இப்படி: ~இங்கு இவன் கறையானால் சுரண்டப்படுகின்றான்.| ஒரு நடிகையின் சமாதியில் இவ்வாறாக:- ~இப்பொழுது தான் இவள் மேக்கப் இல்லாமல் உறங்குகின்றாள்..| ஒரு விலை மாதுவின் கல்லறையில்: ~இங்குதான் இவள் தனியாக தூங்குகின்றாள்.|

இப்படி இன்னும் பல வாசகங்களை அடுக்கிக் கொண்டேபோகலாம். ஏன் இவற்றை நான் எழுதுகின்றேன்? ஏனென்றால், உலகில் வாழும் அனைவரையும் பெயர் பெயராக ஒவ்வொருவரையும் பல ஆயிரக்கணக்கான கண்கள் கவனித்துக் கொண்டே இருக்கின்றன. ஆண்டவரும் உன்னை கவனிக்கிறார்! நீ இக்கட்டுரையை வாசிப்பதையும் அவர் அறிவார். வேதவசனம் சொல்கிறது: ~ஒருவன் விருந்து வீட்டிற்கு போவதைக் காட்டிலும் துக்க வீட்டிற்கு போவது நல்லது என்று. இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும். உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.| (பிரசங்கி 7:2)

நீர் உயிரோடிருக்கின்றீரா? அல்லது வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்கு ஒப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? ஏனெனில், உன்னையும் ஒருவர் கவனித்து கொண்டு இருக்கின்றார், ‘நீ தனிமையில் இருப்பீரானால், ~இல்லை| யாரும் என்னை கவனிக்கவில்லை” என்று மறுக்கக்கூடும். ஆயினும் உன்னை ஒருவர் கவனிக்கிறார். ~நாங்கள் ஒன்றும் கொண்டுவந்ததும் இல்லை! ஒன்றும் கொண்டு போகப்போவது மில்லை!| என்பதுதான் வாழ்க்கையா? லாசரு மரித்தபோது அவனது கல்லறை அருகே இயேசு வந்து நின்று கண்ணீர்விட்டார்! அவனது கல்லறை வாழ்க்கையிலிருந்து உயிர்ப்பித்தார். நித்தியநித்தியமாய் வாழக்கூடிய மோட்சத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் அவரே வழியானார்.

~ஒருவர் மரித்தபின் அவரின் கல்லறையில் நல்லதையோ கெட்டதையோ எழுதிவைத்து விடுகிறார்கள் அல்லவா?| இயேசுகிறிஸ்து அடக்கம்பண்ணப்பட்டபின் ‘ராஜாதி ராஜாவாக கர்த்தரின் கர்த்தராக அவர் உயிர்த்தெழுந்துவிட்டார். அவர் இங்கே இல்லை! அவரை மரித்தவர்களிடத்தில் தேடுவானேன்?| என்று கல்லறையில் இரு தேவதூதர்கள் சாட்சியளித்தனர். அது சரி, இன்னுமொரு கல்லறை ஒவியத்திற்குள் உங்களை அழைத்து செல்ல விரும்புகின்றேன்.

கருவறைக்குள் ஒரு சிசு சிந்திக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். அது எதைத்தான் சிந்திக்கும்? ~நான் இப்பொழுது எதை செய்து கொண்டு இருக்கிறேன்?| என்று சிந்திப்பதாக வைத்துக் கொண்டால், கருவறைக்குள் சிசு என்ன செய்து கொண்டிருக்கிறது?

'நான் கருவறை என்ற இருட்டினுள் இருக்கின்றேன். அப்படியானால், நான் கண்கள் என்று ஒன்று இருப்பதை நம்பத்தான் வேண்டுமா? எனக்கு ஒளியும் நிறமும் உள்ள வேறொரு உலகிற்கு என் கண்கள் நிஜமாகவே தேவைப்படுமா? எனக்கு ஏன் கண்கள்? எனக்கு எதற்கு கால்கள்? என்னால் காலை நீட்டவும் முடியாமல், மடிக்கவும் முடியாமல் கூனிகுறுகி மடிந்து வைத்து கொண்டிருப்பது தானா வாழ்க்கை? நான் ஓடவும் நடக்கவும் குதிக்கவும் தானா இப்படி வேதனையை சகிக்கின்றேன்? எனக்கு கைகள் எதற்கு? ஒருவேளை, ஏதோவொரு காலத்தில் வேலைசெய்து, என் குடும்பத்தினரை என்னை உருவாக்கிய பெற்றோரை பராமரிக்க, சம்பாதிக்க, வேலைசெய்ய தேவையா? அப்படிப்பட்டதொரு உலகம் உண்டா? இக்கருவறைக்கு வெளியே எனக்கு வாயும் நாக்கும் தேவைப்படுமா? " இப்படி கருவறையிலுள்ள சிசு எவ்வளவுதான் கேள்வி எழுப்பினாலும் அது கருவறையை விட்டு வெளியேவரும் வரை அதனால் மெய்யான உலகத்தை அனுபவிக்க முடியுமா?

அன்பான கிறிஸ்தவ சகோதரனே, நீ கிறிஸ்துவை உடையவனாக இருப்பாயானால், உனக்கு ஜீவன் உண்டு. கருவறையை விட்டு வெளியேவருவது அந்த சிசுவுக்கு எத்தனை அவசியமோ, அவ்வாறே, நீ மரிக்கும் போது கிறிஸ்து உனக்கு முக்கியமல்லவா? 'என் உயிரான உயிரான உயிரான இயேசு" என்று பாடிக்கொண்டு நீ நித்திய ஜீவனை சுதந்தரிக்க வேண்டாமா? அல்லாவிட்டால், உன்னைக் குறித்து இப்பூமியில் எழுதப்படும் வாசகங்கள் நகைச்சுவைக்குரிய துணுக்குகளைப் போல் அல்லவா இருக்கும்?

~கருவறைக்கு வெளியே வாழ்வா? இது என்ன விசர்கதை?| என்று கருவிலுள்ள சிசு எண்ணினால் அது எவ்வளவு அறியாமை? ஆனாலும், சிசு வெளி உலகத்தை காணாவிட்டாலும் அது தனது தாயின் செயல்பாடுகளின் மூலம் வெளி உலகத்தை உணருகிறதல்லவா? காற்றினை காணாவிட்டாலும், அதனை உணர்கிறோமல்லவா? எமது இதயம், சுவாசப்பை, நுரையீரல் ஆகியவற்றை நாம் காணாவிட்டாலும் அவை இருக்கின்றது என நாம் சுவாசிப்பதனால் அல்லவா நாம் நம்புகின்றோம்? இப்பொழுது சற்று சிந்தித்துபார்! உன் கிறிஸ்தவ வாழ்க்கையில், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைபோல காணப்படும் பகுதிகள் என்ன? நகைச்சுவைக்குரிய கல்லறை வாசகங்கள் என்ன?

'நாம் எமது வாழ்க்கையில் அறிவு, ஞானம், பெயர், புகழ், பணம், அனுபவம் ஆகியவற்றை சம்பாதித்து மேன்மையான நிலைமையில் இருக்கும்போது, சவப்பெட்டி நமக்காக காத்திருக்கிறதே?" -இது ஒரு தத்துவ ஆசிரியரின் கருத்து. கருவறை சிசுவுக்கு கருவறைக்கு வெளியே உள்ள வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள முடியாத மனமுடன் இருந்தால் என்ன நடக்கும்? சிசு ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதற்குரிய நேரம் வரும்போது அழுதபடியே வெளியே வருகின்றது சிசு! இன்று உன் வாழ்வினை குறித்து தேவனுடைய பாதத்தில் அழாமல் இருக்கின்றாயா? அப்படியாயின் உனக்கு உயிர் இல்லை என்று தானே அர்த்தம்? கிறிஸ்தவர்களாகிய நமக்கு கிறிஸ்து இயேசுவுக்குள் தொடர்ச்சியான நிரந்தரமான, மரணத்திற்கு அப்பாலும், நம் சரீர வாழ்விற்கு பின்னாலும் அமைந்த ஒரு நிஜமான வாழ்க்கை ஓர் நித்தியமான வாழ்க்கை உண்டு. அதனை உணர்ந்து கொள்கின்றோமா?

~படுவேதனையில் பரம வெற்றி| என்ற புத்தகத்தை எழுதிய ரூமேனிய நாட்டை சேர்ந்த யூத குலத்தில் பிறந்த கிறிஸ்தவ எழுத்தாளரான ~ரிச்சட் உம்பிரான்ட்| என்பவரின் வாழ்க்கை சரிதையில்;, அவர் தனது வாழ்க்கை சுறுக்கத்தை ஒரு கொடூர இரகசீய போலீஸ் அதிகாரியிடம் பகிர்ந்து கொண்டார். அதனை இவ்வாறாக விளக்குகிறார்.

'நான் மயானத்தினுள் நடந்து, அங்குள்ள கல்லறைகளில் எழுதப்பட்டுள்ள வாசகங்களை வாசிப்பது எனக்கு விருப்பமான காரியங்களில் ஒன்று. ஏனெனில் நான் சிறு பிள்ளையாக இருந்தபோது, என்னை பரிசோதித்த வைத்தியர் எனது தாயாருக்கு கூறியது எனக்கு இன்னமும் ஞாபகத்திலுண்டு. ~இந்த பையனை சுகப்படுத்தவே முடியாது. இவன் வெகு சீக்கிரத்தில் செத்துபோய் விடுவான்.| வைத்தியர் போனபின்பு, நான் எனது தாயாரிடம் ~அம்மா செத்து போவது என்றால் என்ன?| எனக் கேட்டேன். அம்மா தனக்குள் விம்மி அழுதபடியே எனக்கு பதிலளிக்காமல் போய்விட்டாள். கொஞ்ச நாட்களின் பின் என் தந்தையார் மரித்தார். அவரை பிரேதப ;பெட்டியில் போட்டு, குழியொன்றினுள் இறக்கி, அதனை மண்ணால் மூடப்படுவதை கண்டேன். இனிமேல் எனக்கு அப்பா இல்லையா? ஒருநாள் நான் இறந்தபின் என் உடல் மீதும் இப்படித்தான் மண்ணைபோட்டு மூடுவார்களோ? ஆயிரமாயிரம் கேள்விகள் எனக்குள்.

நான் பாடசாலையில் நல்ல மாணவனாக பெயர் பெற்றிருந்தேன். பரீட்சைகளில் முதல் மதிப்பெண் பெறுவதுமுண்டு. ஆனாலும் உண்மையில் சொன்னால் அட்சர கணிதம், பௌதீகம் கற்றும் என் வாழ்விற்கு அவற்றினால் பயன் ஏதுமில்லை என்பதை உணர்ந்தேன். அப்பொழுதே எனது எண்ணமெல்லாம், 'மரணத் தின் பின் என்ன" என்பதை அறியவேண்டும் என்பதாக தான் இருந்தது. சிலகாலத்திற்கு பின்பு, நானும் மரித்துபோய் விடுவேன். கம்யூனிஸ்ட் படைத்தளபதியான நீரும் ஒரு காலத்தில் மரித்துபோய்விடுவீர். நமது பெயரும் அநேகரைப் போல மறக்கப்பட்டு போய்விடும். நாமும் மறக்கப்பட்டு போய் விடுவோம். எமது உடல் மண்ணோடு மண்ணாகவும், சாம்பலோடு சாம்பலாகி விடும். சில வருடங்கள் எமது கல்லறை ஒருவேளை யாராலும் தோண்டப்படாமல் இருக்கலாம். ஆயினும் எல்லாம் மக்கி, அழுகிபோய் விடும். பின்பு அவை தோண்டப்படும். இடிப்படும். இப்படி நாம், இவ்வுலகில் என்றுமே இருந்திராதவர்கள்போல ஆகிவிடும் ஒரு காலம் வருமல்லவா? இரகசிய போலீஸ் அதிகாரி, தமது அதிகாரத்தை கொண்டு ரிச்சட் உம் பிரானை விசாரித்த போதும் அவருக்குள்ளும் அவரது மரணத்திற்கு பின் என்ன நடக்கும்? என்ற கேள்வி ஏற்பட்டது? அவரும் ஒருநாள் மரித்துபோய் விடுவார் என்பதை அவர் உணர்ந்து கொண்டார். அவர் விடுதலையாகி பல வருடங்களின் பின்பு, முதிர்வயதை எட்டியபோது, முன்பு அவரை கைதுசெய்திருந்த இரகசிய போலீஸ் மேலதிகாரியின் மரணத்தினை கேள்விபட்டு அவர் அடக்கம் பண்ணப்பட்ட கல்லறைக்கு சென்றார். அதற்கு அவர் மலர் தூவினார்.

அவர் தமது வாழ்நாளில் கொண்டிருந்த நம்பிக்கையின்படி, மரணத்தின் பின் ஒரு வாழ்க்கை இல்லையென்றால், அவர் அம் மலர்களில் மகிழ்ந்திருக்கமாட்டார். கல்லறைகள் எத்தனை பெறுமதியான இலக்கியங்களை கொண்டிருக்கின்றன? அதன்பின்பும் ரிச்சட் உம்பிரான்ட் கல்லறை பாதைகளினூடாக நடப்பதுண்டு.

ஓர் கல்லறையில் அங்கு புதைக்கப்பட்டிருப்பது ஓர் இராணுவ ஜெனரல் என எழுதப்பட்டிருந்தது. இராணுவத்தில் ஜெனரல் பதவிக்கு மேலே அந்தஸ்து ள்ள பதவி இல்லை. ஆனாலும் அவர் தான் மரித்து விட்டாரே. இன்னொரு கல்லறை பிரபல கோடீஸ்வரு டையது. அவருந்தான் இறந்துவிட்டான். அவருடைய கோடி கோடிகளுக்கு என்னவாயிற்று? இன்னொரு கல்லறை ஒரு புலவருடையது. அவரும்கூட தமது புலமையில் மகிழக்கூடாமல் மரித்துவிட்டாரே. இப்படி ரிச்சட் உம்பிராண்ட் அவர்கள் மாவீரர்களது, புரட்சி போராளிகளது, அரசாங்க உயர் பதவி வகித்த ராஜ கல்லறை தோட்டங்களிலும் கிறிஸ்துவுக்குள் மரித்த விசுவாச வீரர்கள், இரத்த சாட்சிகளின் கல்லறை களையும் அவர் கண்டிருக்கக்கூடும்.

யூதா நிருபத்தில் மோசேயின் சரீரத்தை குறித்து சாத்தான் தர்க்கித்ததை காணலாம். மோசேயின் கல்லறை எங்குள்ளது என்று மனிதர்கள் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், அவனது நற்சாட்சியினால், பரிசுத்த வெளிச்சம் வீசும் அவன் முகபிரகாச த்தின் வாழ்க்கையினால் பிசாசு அவனுடைய சரீரத்திற்காக போராடியது. நம்மை குறித்து நாம் மரித்த பின்பு கூறப்படும் காரியங்களைக் குறித்து சிந்தித்துள்ளோமா? அவை எவ்வளவு முக்கியமானதாக உள்ளன?

ரஷ்ய லெனின் சதுக்கத்தில் அவனது சரீரம் பாதுகாக்கப்பட்டதினால் பயன் யாது? ஒவ்வொரு மனித னுடைய வாழ்க்கையும் நன்மையானாலும், தீமையா னாலும், மரித்த பின்பு, அவ்வாழ்க்கை அலசி ஆராயப் படும். ரிச்சட் உம்பிரான்ட் தம்மை விசாரித்த அதிகாரி, தம்மை மரணத்துக்குள்ளாக்க அதிகாரம் இருந்தும், அவருக்கு இயேசுவை பற்றியும், உயிர்த்தெழுதலை பற்றியும், எடுத்து கூறினார். அவர் ஏற்றுக் கொண்டாரோ இல்லையோ, அவருடைய மரணத்தை ரிச்சட் உம் பிராண்ட் கண்டார். இயேசு ஒருமுறை தன்னைச் சூழ இருந்தவர்களிடம், ~ஒரு மனுஷன் உலகம் முழுவதை யும் தனக்கு உரியதாக ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தனது ஆத்துமாவை இழந்தால் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் பயன் என்ன?| (மாற்கு 8:36)

தனது மரணத் தறுவாயின் போது நாஸ்தீகனும் சோவியத்தின் சர்வதிகாரியுமான அந்ரோபோவ் விட்டுப்போன குறிப்பு ஒன்றிலிருந்து: 'இந்த உலகம் நான் இன்றி இருக்கின்றது. இன்னமும் தொடர்ந்து நான் இன்றியே இவ்வுலகம் எத்தனையோ வருடங்கள் இருக்கத்தான் போகிறது. அதிலே நான் சொற்பகாலம் வாழ்ந்தேன். சீக்கிரமாக மரித்துபோய் விடுவேன். அதன் பின்பு நான் வெகு சீக்கிரத்தில் முற்றாக மறக்கப்பட்டு போய்விடுவேன். இதை எண்ணிப்பார்க்கும் போதே பயங்கரமாய் உள்ளது" என்று எழுதினார். பவுல் கூட ~அன்பு எனக்கிராவிட்டால் ஒன்றுமில்லை நான்| என்கிறார்.(1கொரி.13:2). கிறிஸ்தவர்களாகிய நாம் ~ஒன்றுமி;ல்லை| என சுயத்தை மறுப்பதையே கிறிஸ்து விரும்புகிறார். ஆம், கிறிஸ்தவர்கள் யாவருமே கிறிஸ்து இல்லாவிட்டால் ஒன்றுமில்லை. (கலா.6:3) உண்மை எதுவெனில், இயேசுவின் கல்லறை வெறுமையாயிருந்தது@ அவரது கல்லறை வெறுமையாயிருப்பதை கண்ட ரோமர்களாலும், யூதர்களாலும் அதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை. மனிதர்கள் மத்தியில் இயேசுவும் ஒரு மனிதராக வாழ்ந்தார். ஒரு ஏழை தச்சனாக இருந்தாலும் குருடனின் கண்களை திறந்தார். முடவரை நடக்கச் செய்தார். இழந்துபோன உங்கள் வாழ்க்கையையும் இரட்சிக்கும்படியாகவே இயேசுகிறிஸ்து உலகிற்கு வந்தார். அவரை விசுவாசிக்கிறவர்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையாக அல்ல. கிறிஸ்துவை உடையவர்களாக வாழ்வார்கள். அவர்களது வாழ்வில் மெய்யான நித்திய ஜீவன் இருக்கும் அர்த்தமுள்ள வாழ்வாக அமையும். நீங்கள் உண்மை கிறிஸ்தவர்களாக கிறிஸ்துவின் மாதிரியை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழுங்கள். நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளட்டும். கிறிஸ்து உங்கள் கல்லறை வாழ்க்கையினை மாற்றி உங்களோடு கூட இருந்து ராஜரீகம்பண்ணுவராக! ஆமென்.